நகைச்சுவையான குல்தீப் யாதவின் DRS முறையீடுகள்: கிண்டல் செய்து மகிழ்ந்த ரோகித் சர்மா
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டியின் போது குல்தீப் யாதவின் DRS முறையீடு மைதானத்தில் நகைச்சுவையை தூண்டியது ரசிகர்களின் விருப்பத்தை ஈர்த்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதல்
சனிக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
[38DTB5
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் குயின்டன் டி காக் தனது அபாரமான 23 வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.
இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அதிரடியாக 116 ஓட்டங்கள் குவித்து அசத்தினார், அத்துடன் ரோகித் சர்மா 75 ஓட்டங்களும், விராட் கோலி 65 ஓட்டங்களும் குவித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.
நகைச்சுவையான குல்தீப் யாதவின் DRS முறையீடுகள்
இந்த போட்டியில் இந்திய அணியின் இடது கை மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவின் பங்களிப்பு மிகப்பெரியது, அவர் தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான டேவால்ட் ப்ரெவிஸ், மார்கோ ஜான்சென், கார்பின் போஷ் மற்றும் லுங்கி என்கிடி ஆகிய நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டினார்.

குல்தீப்பின் இந்த அபாரமான பந்துவீச்சுகளுக்கு மத்தியில், அவரது அதிகப்படியான DRS முறையீடுகள் மைதானத்தில் நகைச்சுவை நிகழ்வாகின.
பந்து பேஸ்ட்மேனை கடந்து சென்றாலோ, பேடில் லேசாக பட்டாலோ கூட குல்தீப் தொடர்ந்து DRS முறையீடுகளை விடாப்பிடியாக எழுப்பிக் கொண்டிருந்தார்.
குல்தீப்பின் இந்த செயலை சக வீரர்கள் வேடிக்கையாக பார்த்து கேலி செய்து பேசிக் கொண்டனர்.
🗣️ You need to have those people around to guide you to calm down 👌
— BCCI (@BCCI) December 6, 2025
🎥 Hear from Kuldeep Yadav as he talks about his fun on-field banter with Rohit Sharma during DRS calls 😄#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank | @ImRo45 | @imkuldeep18 pic.twitter.com/D8QcXOd9C2
மூத்த வீரரான ரோகித் சர்மா குல்தீப்பின் DRS முறையீடுகளை மீண்டும் மீண்டும் நிராகரித்ததோடு, அவரை சீண்டி கிண்டல் செய்து மகிழ்ந்தார்.
இந்த சம்பவம் விராட் கோலியை சிரிக்க வைத்தது, கேப்டன் கே.எல் ராகுல் அவ்வப்போது குல்தீப்பை அமைதிப்படுத்தி மீண்டும் பந்துவீச அனுப்பிய காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |