500வது போட்டியில் சொதப்பிய ரோஹித்! டக்அவுட் ஆன கோஹ்லி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 25 ஓட்டங்களுக்கு 3 முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ரோஹித்தின் 500வது போட்டி
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது.
Virat Kohli's first duck in Australia! pic.twitter.com/t5rNeyFd4J
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 19, 2025
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்ய, இந்திய அணியில் ரோஹித் ஷர்மாவும், சுப்மன் கில்லும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரோஹித் ஷர்மா பவுண்டரி அடித்து நன்றாக தொடங்கினார். ஆனால் 8 (14) ஓட்டங்களில் இருந்தபோது ஹேசல்வுட் ஓவரில் ஆட்டமிழந்தார். இது அவரது 500வது சர்வதேச போட்டியாகும்.
குறுக்கிட்ட மழை
ஓட்டங்கள் எடுக்க தடுமாறிய விராட் கோஹ்லி (Virat Kohli) தான் சந்தித்த 8வது பந்தில் ஸ்டார்க் ஓவரில் டக்அவுட் ஆனார்.
அவர் அடித்த ஷாட்டை கூப்பர் கோனொலி பாய்ந்து பிடித்தார்.
அடுத்து எல்லிஸ் பந்துவீச்சில் கில் 10 (18) ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் இந்திய அணி 25 ஓட்டங்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா 11.5 ஓவரில் 37 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |