பந்து பேட்டில் படாமலேயே ரோகித் சர்மாவுக்கு அவுட் கொடுத்த நடுவர்! ரசிகர்களை ஷாக்காக்கிய வீடியோ
ஐபிஎல் போட்டியில் மும்பை கேப்டன் ரோகித் சர்மா அவுட்டான விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 56வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் கொல்கத்தா அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்களுடன் விளையாடி கொண்டிருந்த போது சவுத்தி வீசிய கடைசி பந்து சற்று ஷார்ட் லெந்த் பந்தாக வீசப்பட்டது.
இதனை ரோகித் சர்மா சற்று குதித்து லெக் சைட் அடிக்க முயன்றார். அப்போது அதனை கேட்ச் பிடித்துவிட்டு, எட்ஜானதாக கூறி ஷெல்டன் ஜாக்சன் முறையிட்டார்.
— Diving Slip (@SlipDiving) May 9, 2022
இதற்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். இதனை ரீப்ளே செய்து பார்த்த போது, பந்து பேட்டில் படுவதற்கு முன்னதாகவே கால் பேடில் பட்டது போன்று அல்ட்ரா எட்ஜில் தெரியவந்தது.
இதனால் மும்பை ரசிகர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி தரும்படி 3வது நடுவர் அந்த பந்து பேட்டில் தான் பட்டது எனக்கூறி அவுட் கொடுத்தார்.
நடுவரின் இந்த முடிவால் மும்பை அணியினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து சமூகவலைதளத்தில் பலரும் நடுவரை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.