இப்படியும் ஒரு சாதனையா! சச்சின் டெண்டுல்கர் செய்த சாதனையை படைத்த ரோஹித் ஷர்மா
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
முதலிடம்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஒரு சதத்துடன் 202 ஓட்டங்கள் குவித்தார். 
இதன்மூலம் அவர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். அதிக வயதில் ஒருநாள் கிரிக்கெட்டில் முதலிடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.
இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) 38 வயது 73 நாட்களாக இருந்தபோது டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார்.
ரோஹித் ஷர்மா அதே வயதில் (38 வயது 182 நாட்கள்) ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |