என் முன் யார் வந்தாலும்.,அதனையே விரும்புகிறேன்: ரோஹித் ஷர்மா கூறிய விடயம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் சிக்ஸர் அடிப்பேன் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
637 சிக்ஸர்கள்
ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் 637 சிக்ஸர்கள் விளாசி முன்னணியில் உள்ளார். இதன்மூலம் அவர் ஒரு Power-Hitterயில் ஒருவராக இருக்கிறார்.
இந்த நிலையில் Oral-B ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில், ரோஹித்திடம் எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக சிக்ஸர் அடிப்பதை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரோஹித் ஷர்மா (Rohit Sharma), "நான் எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக துடுப்பாட்டம் செய்தாலும், என் சிந்தனை எப்போதும் ஆதிக்கம் செலுத்துவதாகவே இருக்கும். நான் தாக்க விரும்பும் ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளர் இல்லை. என் முன் யார் வந்தாலும், நான் அவரை என் சொந்த வழியில் அழுத்தத்திற்கு உள்ளாக்க விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மா ஒருநாள் போட்டிகளில் 344 சிக்ஸர்களும், டி20 போட்டிகளில் 205 சிக்ஸர்களும், ஐபிஎல் தொடர்களில் 302 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |