இங்கிலாந்தை லார்ட்ஸில் தோற்கடித்தால்? பத்திரிக்கையாளர் கேள்விக்கு சல்யூட் அடித்து பதில் சொன்ன ரோகித்: வைரலாகும் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்கு பின், ரோகித்சர்மா சல்யூட் அடித்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதில் இந்திய அணியின் துவக்க வீரரான ரோகித்சர்மா 145 பந்துகளில் 83 ஓட்டங்கள் குவித்து அணிக்கு ஒரு வலுவான துவக்கத்தை கொடுத்தார். இவரைப் போன்றே மற்றொரு துவக்க வீரரான கே.எல்.ராகுல் சதமடித்து 127 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்ட முடிந்த பின்பு ரோகித் சர்மா பத்திரிக்கையாளர்களை வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சந்தித்தார். அப்போது, பத்திரிக்கையாளர் ஒருவர் ரோகித்திடம், ஆகஸ்ட் 15-ஆம் திகதி இன்னும் சில நாட்களில் வரப்போகிறது.
அதே போன்று இந்த போட்டியும் கிட்டத்தட்ட அந்த நாள் வரும் போது, போட்டியின் முடிவை உறுதி செய்துவிடும். அப்படி இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், அது சுதந்திரதினத்தை மேலும் சிறப்பாக கொண்டாட ஒரு காரணமாக அமையும் என்று கேட்டார்.
Rohit Sharma with another gem in press conference ???
— Subhayan Chakraborty (@CricSubhayan) August 13, 2021
Video: BCCI#ENGvIND pic.twitter.com/v7rw0CIEBk
அதற்கு கோஹ்லி, அவருக்கு ஒரு சல்யூட் அடித்து, சுதந்திர தினத்தின் போது, இந்தியா மட்டும் அப்படி வெற்றி பெற்றால், அது ஒரு மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்று பதிலளித்தார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. முதல் நாள் முடிவில், ஒரு நிருபர் ரோஹித் சர்மாவிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்,
அவருடைய காவிய பதில் வைரலாகிவிட்டது. நிருபர் ‘ஹிட்மேனிடம்’ இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வெல்ல முடிந்தால், 2021 ஆகஸ்ட் 15 அன்று வரும் இந்தியா முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாட மற்றொரு அற்புதமான காரணம் இது.
அதற்கு, ரோஹித் சர்மா ஒரு சல்யூட் கொடுத்து, இந்திய சுதந்திர தினத்தின் போது இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்றால் அது ஒரு பெரிய சாதனையாக இருக்கும் என்று பதிலளித்தார்.