இறுதிவரை போராடினோம்! தோல்வி துரதிர்ஷ்டவசமானது - கேப்டன் ரோகித் சர்மா
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வியுற்றது துரதிர்ஷ்டவசமாக இருந்தாலும் தலை நிமிர்ந்து போராடுவோம் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியா சாம்பியன்
ஓவல் மைதானத்தில் நடந்த உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணியை 209 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா சாம்பியன் ஆனது.
163 ஓட்டங்கள் விளாசிய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். அவுஸ்திரேலியாவின் இந்த வரலாற்று வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
The skipper and the player of the match ?
— cricket.com.au (@cricketcomau) June 11, 2023
Travis Head was voted the most influential player in the #WTC23Final for his 163 in the first innings! pic.twitter.com/f22FjWvA34
ரோகித் சர்மா
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தோல்வி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், 'நாணய சுழற்சியில் வென்று நன்றாகத் தொடங்கினோம் என்று நினைத்தேன். அத்தகைய சூழ்நிலையில் அவர்கள் (அவுஸ்திரேலிய அணி) துடுப்பாட்டத்திற்கு அனுப்பப்பட்டனர். முதல் அமர்வில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம், பின்னர் நாங்கள் பந்துவீசிய விதம் எனக்கு ஏமாற்றம் அளித்தது.
அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்களுக்கு பெருமை சேரும். டிராவிஸ் ஹெட் வந்து ஸ்டீவ் ஸ்மித்துடன் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். இருவரும் நன்றாக துடுப்பாட்டம் செய்தது எங்களை சற்று எச்சரிக்கையாக இருக்க வைத்தது.
இதுபோன்ற போட்டிகளில் மீண்டு வருவது எப்போதும் கடினம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இறுதிவரை போராடினோம். நேர்மையாக இரண்டு இறுதிப்போட்டிகளில் விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல சாதனையாகும், ஆனால் இந்த செயல்திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் செய்தது இங்கு நடந்ததற்கு பொறுப்பாக முடியாது. இது முழு அணியின் சிறந்த முயற்சி. இறுதிப்போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் நாங்கள் தலை நிமிர்ந்து போராடுவோம்' என தெரிவித்துள்ளார்.
Rohit Sharma said, "for us winning the Trophy is more important than winning the series. Everyone is disappointed currently". pic.twitter.com/Nx10pnwws3
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 11, 2023