நேபாளத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி! ரோகித்-கில் அரைசதம்
ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தியது.
பல்லேகேலேவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய நேபாளம் அணி 230 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ICC (twitter)
ஆசிப் ஷேய்க் 58 ஓட்டங்களும், சோம்பல் கமி 48 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணியின் தரப்பில் சிராஜ் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
BCCI (twitter)
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 17 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பொழிந்தது. இதனால் D/L விதிமுறைப்படி 23 ஓவர்களில் 145 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா, சுப் கில் அரைசதம் விளாசி அணியை வெற்றி பெற வைத்தனர்.
ICC (twitter)
ICC (twitter)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |