பறந்த சிக்சர்கள்! 14 பந்துகளில் பேட் கம்மின்ஸ் அரைசதம்! முகத்தில் ஈ ஆடாமல் நின்ற ரோகித் சர்மா வீடியோ
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் விளாசி கொல்கத்தா அணிக்கு பேட் கம்மின்ஸ் வெற்றியை தேடி தந்துள்ளார்.
அதன்படி மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை பறக்கவிட்ட பேட் கம்மின்ஸ் ப்ரீ ஹிட் பந்தில் ஸ்டைலாக பவுண்டரி மூலம் அரை சதம் அடித்தார்.
மொத்தமாக 15 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த அவர் கொல்கத்தா அணி எடுக்க வேண்டிய 162 ரன்கள் என்ற இலக்கை எளிதாக தொட உதவினார்.
Fastest Fifty in IPL by @patcummins30 #PatCummins 50 off 13 Balls ???? #IPL2022 #KKRvMI #KKR @KKRiders #KKRHaiTaiyaar #Ipl #KolkataKnightRiders @IPL @iamsrk pic.twitter.com/MUke2JjMk5
— Abhimanyu Gupta (@iamabhinoel) April 6, 2022
பேட் கம்மின்ஸ் பவுண்டரியும், சிக்சரும் விளாசிய போது மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா முகத்தை பார்க்க வேண்டுமே! ஈ ஆடவில்லை..
இப்படி அடிச்சு துவம்சம் பண்றானே, கஷ்டப்பட்டு எடுத்த மொத்த ரன்களை எளிதாக அடிக்கிறானே என்பது போல பாவனையில் அவர் இருப்பதை காண முடிந்தது.
Pat Cummins- What a Player ??? #KKRvsMI #PatCummins #IPL2022 pic.twitter.com/fL5yKNw4AX
— Cricket Countdown (@Cric8Countdown) April 6, 2022