சிக்சர் விளாசிய வீரரை அடுத்த பந்தில் வெளியேற்றிய ரோகித் சர்மா! கீழே படுத்து பிடித்த அபார கேட்ச் வீடியோ
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பிடித்த அபார கேட்ச்சின் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.
37வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய நிலையில் லக்னோ அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் லக்னோ விக்கெட் கீப்பர் குயிண்டன் டீ காக் ஓப்பனிங் வீரராக களமிறங்கினார். அப்போது பும்ரா ஓவரில் டீ காக் வேகமாக அடித்த பந்து பவுண்டரி கோட்டின் அருகே நின்றிருந்த தலக் வர்மாவிடம் சென்றது.
Now say ' Vada pav ' what a catch @ImRo45 ??#RohitSharma? #IPL2022 pic.twitter.com/c9fR4PfTMP
— mumbai indians fan army 45 (@RohitPa58399726) April 24, 2022
இதையும் படிங்க: ஐபிஎல்! மலிங்கா போன்ற ஜாம்பவான்கள் கூட செய்யாத சாதனையை படைத்த பிரபல வீரர்
ஆனால் பந்தை அவர் கோட்டை விட சிக்சருக்கு சென்றது. இதற்கு அடுத்த பந்தில் மீண்டும் ஒரு ஷாட்டை டீக் காக் அடிக்க பாய்ந்து முன்னோக்கி வந்து கேப்டன் ரோகித் சர்மா பிடித்து அவரை அவுட்டாக்கினார்.
இப்போது வர்மா நிம்மதி பெருமூச்சு விடுவதையும் காணமுடிந்தது.