கோஹ்லி ஒரு தரமான வீரர்! அவர் இறுதிப்போட்டிக்காக தன்னை தயாராக்கி வருகிறார் - ரோஹித் ஷர்மா
பாரிய போட்டிகளில் விராட் கோஹ்லியின் முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
ஆனால், நேற்றையப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் விராட் கோஹ்லி 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
நடப்பு தொடரில் சொதப்பலான அவரது ஆட்டம் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனினும் கோஹ்லிக்கு ஆதரவாக அணித்தலைவர் ரோஹித் ஷர்மா பேசியுள்ளார்.
கோஹ்லியின் ஃபார்ம்
அவர் கூறுகையில், ''கோஹ்லி ஒரு தரமான வீரர். எந்த வீரரும் அதை கடந்து செல்லலாம். அவரது ஆட்டத்தையும், இந்த பெரிய விளையாட்டுகளில் அவருடைய முக்கியத்துவத்தை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஃபார்ம் ஒரு பிரச்சனை இல்லை.
நீங்கள் 15 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடும்போது, ஃபார்ம் ஒரு பிரச்சனையாக இருக்காது. அவர் நன்றாக தெரிகிறார், ஒரு நோக்கம் இருக்கிறது. அது இறுதிப்போட்டிக்காக சேமித்து வைத்திருக்கலாம்'' என தெரிவித்தார்.
மேலும் அவர் இறுதிப்போட்டி குறித்து பேசும்போது, நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றும், அதையே இறுதிப் போட்டியிலும் செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |