லார்ட்ஸில் ஓய்வை அறிவிக்க உள்ள ரோஹித் சர்மா? போட்டியை காண வந்துள்ள பெற்றோர்கள்
லார்ட்ஸில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்க உள்ளதாகவும், அந்த போட்டியை காண அவரது பெற்றோர்கள் லண்டன் வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஓய்வை அறிவிக்க உள்ள ரோஹித் சர்மா?
இந்தியா மற்றும் இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 டி20 மற்றும் 3 ODI போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
ஜூலை 19 ஆம் திகதி நடைபெற லார்ட்ஸில் நடைபெற உள்ள 3வது ODI போட்டியில் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்திற்கான எதிரான முதல் 2 ODI போட்டிகளில் 11 மற்றும் 26 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தார். கடைசியாக விளையாடிய 8 ஒருநாள் போட்டிகளில், ஒரு அரைசதம் உட்பட 241 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.
ஒருபக்கம் இவ்வாறு ஓட்டங்களை குவிக்க திணறி வரும் நிலையில், 2027 உலக கிண்ணத்திற்கான இந்திய அணியில் ரோஹித் சர்மாவிற்கு பிசிசிஐ வாய்ப்பளிக்க போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக அதிருப்தியில் உள்ள ரோஹித் சர்மா லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியுடன் ஓய்வை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
லண்டன் வந்துள்ள பெற்றோர்கள்
ரோஹித் சர்மாவின் இறுதிப்போட்டியை காண அவரது பெற்றோர்களான குருநாத் ஷர்மா மற்றும் பூர்ணிமா ஷர்மா ஆகியோர் லண்டனுக்கு வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, " உண்மை என்னவென்றால், ரோஹித் சர்மாவும் தேர்வுக்குழுவினரும் பேசினார்கள். இப்போதுதான் அங்கிருந்து வருகிறேன். ஓய்வு பெறுவாரா என்பது உண்மையா, வதந்தியா என்று தெரியாது.மேலும் அவருக்கு 40 வயதை நெருங்குகிறது" என தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் பார்திவ் படேல், "ரோஹித் சர்மா லார்ட்ஸ் போட்டியுடன் ஓய்வு பெறுவது உண்மையாக இருந்தால் அதனை சதத்துடன் அவர் விடைபெற வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2 ஐசிசி கிண்ணத்தை வென்றுள்ளது.
2023 ODI உலக கிண்ணத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவிய நிலையில், 2027 உலக கிண்ணத்தை வென்று கொடுத்து விட்டு ஓய்வை அறிவிக்க விரும்பினார்.
2024 T20 உலக கிண்ணத்தை வென்றதும் சர்வதேச T20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |