நீதா அம்பானியின் செல்போனை உளவுபார்த்த ரோஹித் ஷர்மா? வைரலாகும் வீடியோ
மகளிர் உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் நீதா அம்பானியின் அருகில் அமர்ந்திருந்த ரோஹித் ஷர்மாவின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நீதா அம்பானி
நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக்கிண்ண இறுதிப்போட்டியைக் காண பிரபலங்கள் பலர் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
What’s my blud Rohit seeing in Nita's phone so seriously? 😭
— mutual.stark (@mutualstark) November 2, 2025
pic.twitter.com/ITlxCWZFcs
அவர்களில் நீதா அம்பானியும் ஒருவர். அதேபோல் ரோஹித் ஷர்மா போன்ற கிரிக்கெட் பிரபலங்களும் வருகை தந்திருந்தனர்.
நீதா அம்பானியின் (Nita Ambani) அருகில் ரோஹித் ஷர்மா (Rohit Sharma) அமர்ந்திருந்தார். அப்போது நீதா தனது செல்போனை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார்.
அதனை தற்செயலாக முதலில் பார்த்த ரோஹித், மீண்டும் மீண்டும் செல்போனை உற்றுநோக்கினார். இது கமெராவில் பதிவாகி இணையத்தில் வைரலானது.
நெட்டிசன்கள் பலரும் இதற்கு தங்களது கருத்துக்களை கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.
அவர்களில் ஒருவர், 'ரோஹித் ஷர்மா நீதா அம்பானியின் செல்போனை உளவு பார்க்கிறாரோ' என்று கிண்டல் செய்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |