நான் அதிரடியாக ஆடியது எனக்கும் ஆச்சரியம் தான்! வியந்து பேசிய ரோகித் சர்மா
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் 20 பந்துகளில் 46 ரன்கள் குவித்த ரோகித் சர்மா.
தன்னுடைய அதிரடி ஆட்டம் தனக்கே ஆச்சரியம் தந்ததாக உற்சாகம்.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் அதற்கு முக்கிய காரணாக இருந்த கேப்டன் ரோகித் சர்மா தனது பேட்டிங் குறித்து பேசியுள்ளார்.
இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 20 பந்தில் 46 ரன்கள் (4 பவுண்டரிகள் , 4 சிக்சர்கள்) விளாசி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
இது குறித்து பேசிய ரோகித் சர்மா, நான் அதிரடியாக ஆடியது எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.
dnaindia
இவ்வளவு நன்றாக அமையும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. விளையாடும் போது நம்மால் அதிகமாக திட்டமிட இயலாது.
பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது என கூறியுள்ளார்.