அல்லு அர்ஜுன் விவகாரத்தை போல திருப்பதி கூட்ட நெரிசலிலும்.., முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி
புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்தது போல திருப்பதி கூட்ட நெரிசலில் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.
ரோஜா கேள்வி
திருப்பதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10-ம் திகதி முதல் 19-ம் திகதி வரை பக்தர்கள் அனைவருக்கும் சொர்க்கவாசல் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக திருப்பதியில் 8 இடங்களில் 91 கவுண்ட்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அங்கு இலவச தரிசன டோக்கன் பெறுவதற்காக ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்ததாக சொல்லப்படுகிறது.
இதனால், அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஆறு பக்தர்கள் மூச்சு திணறி உயிரிழந்துள்ளனர். மேலும், சில பக்தர்கள் காயமடைந்துள்ளனர். இதில், தமிழக மாவட்டமான சேலத்தைச் சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணும் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் ஆந்திர முதலமைச்சர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ரோஜா பேசுகையில், "புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்தது போல திருப்பதி கூட்ட நெரிசலில் காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்.
லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பரிகார தீட்சை செய்தது போல, இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |