ரோலர் கோஸ்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட நபர்: ஜார்ஜியா பூங்காவில் அரங்கேறிய சோகம்
Rollercoaster Accident in Georgia Amusement Park: அமெரிக்காவில் கேளிக்கை பூங்காவில் நடைபெற்ற எதிர்பாராத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ரோலர் கோஸ்டர் விபத்து
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா நகருக்கு அருகில் அமைந்துள்ள சிக்ஸ் ஃபிளாக்ஸ் ஓவர் ஜார்ஜியா(Six Flags Over Georgia) என்ற பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காவில் ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஹெலிகாப்டர் மூலம் செய்தி நிறுவனங்கள் பதிவு செய்த காட்சிகளில், பூங்காவில் புகழ்பெற்ற கோலியாத் ரோலர் கோஸ்டர் நடுவழியில் நின்று கொண்டிருக்கும் நிலையில் நிர்வாகிகள் அதிலிருந்து பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விடுவதை பார்க்க முடிந்தது.

விபத்தில் சிக்கிய நபர் உயிரிழந்ததற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. சில சாட்சிகள் வழங்கிய தகவல் படி, உயிரிழந்த நபர் நடுவழியில் ரோலர் கோஸ்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், அவர் அருகில் இருந்த பேய் மாளிகை மீது விழுந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக கோப் கவுண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
🚨🇺🇸 A person has DIED at Six Flags Over Georgia as riders were being evacuated from a roller coaster. The massive ride standing nearly 200 FEET tall and reaching speeds of 70 MPH, The Goliath, stopped with passengers stranded on the track. The park says it's cooperating with investigators, but the cause of death remains UNKNOWN. Writer: Sol https://t.co/MhVxooSdy8
— Mario Nawfal (@MarioNawfal) October 12, 2026
இதற்கிடையில் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், எங்கள் பூங்காவில் நடைபெற்ற இந்த எதிர்பாராத விபத்தால் நாங்கள் மிகவும் மனமுடைந்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.