ரூ.209 கோடியில் சொகுசு காரை வெளியிட்ட Rolls Royce! மரத்துண்டுகளை வைத்து உருவாக்கப்பட்டதா?
ரூ.209 கோடி செலவில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் உருவாக்கிய சொகுசு காரின் மாடல் வெளியிடப்பட்டுள்ளது.
Arcadia Drop-Tail
Rolls-Royce நிறுவனம் ஆர்கேடியா டிராப்டெயில் (Arcadia Drop-Tail) என்ற சொகுசு கார் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த கார் ஒரு Roadster வகை சொகுசு காராகும். இந்த காரை உருவாக்க ரூ.209 கோடியை Rolls-Royce செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காரை சிங்கப்பூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டுள்ளனர். உலக நாடுகளில் உள்ள பாரம்பரியமிக்க கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டதன் காரணமாகவே இந்த காரை Rolls-Royce நிறுவனம் வடிவமைத்துள்ளது எனவும் கூறுகின்றனர்.
இந்த காரின் பெரும்பான்மையான பகுதிகள் வெள்ளை நிறத்தில் உள்ளது. இந்த நிறமானது அலுமினியம் மற்றும் கண்ணாடி துகள்களின் கலவையால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. அதே சமயம், காரின் உட்புறத்தில் வேறு நிறத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
அதாவது Drop-Tail -ல் உள்ள மாடலை போல அல்லாமல் Arcadia Drop-Tail -ன் அடிப்பக்கத்தில் Carbon fiber tub ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், உட்பக்கத்தில் மரத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மர பேனல்கள்
இதனை வடிவமைப்பதற்காக Santos Straight Grain RoseWood பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ரிச்சான தோற்றத்தை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மரத்தை வேறு Rolls-Royce மாடல்களில் பயன்படுத்தவில்லை.
இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் மர பேனல்கள் கடுமையான வெயில் காலத்தில் பாதிப்படையும் அல்லது விரிசல்கள் ஏற்படும் என்பதால் சூப்பர் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் கோட்டிங்கை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்த திட்டத்தை கைவிட்டு வழக்கமான கோட்டிங்கையே மர பேனல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது மொத்தம் 233 துண்டு மர பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனை உருவாக்க 8000 மணி நேரங்கள் ஆகியுள்ளது.
இந்த காரில் உள்ள Twin turbocharge செய்யப்பட்ட 6.75 லிட்டர் வி12 மோட்டாரானது அதிகபட்சமாக 601 எச்பி மற்றும் 841 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |