இந்த AC வாங்கினால் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை! என்னென்ன அம்சங்கள்?
பூஜ்ஜியம் மின்கட்டணத்தில் வீட்டை நாள் முழுவதும் குளிர்ச்சியாக வைப்பதற்கு இந்த வகையான AC -யை பயன்படுத்துங்கள்.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC வாங்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அதே சமயம் அதன் மூலம் வரும் மின்கட்டணமும் அதிகம். ஆனால், நாம் மின்கட்டணம் இல்லாமலேயே சோலார் ஏசியை பயன்படுத்தலாம். இதற்கு நீங்கள் ஒருமுறை மட்டும் செலவு செய்தாலே போதும். மின்கட்டணம் இல்லாமல் குளிர்ச்சியை அனுபவிக்கலாம்.
சோலார் ஏசி (Solar AC)
சூரிய ஒளியில் இருந்து சோலார் பேனல்கள் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் மூலம் சோலார் ஏசிகள் இயக்கப்படுகின்றன. இந்த ஏசிகள் மூலம் நீங்கள் மின்கட்டண செலவில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், அதே சமயம் இதை பராமரிப்பதற்கான செலவும் அதிகமாகும்.
வழக்கமாக பயன்படுத்தப்படும் ஏசியை விட சோலார் ஏசிகளில் அதிக பவர் ஆப்ஷன்கள் உள்ளது இந்த ஏசிகள் மின்சாரத்தில் வேலை செய்யாமலயே Solar Power, Solar Battery மூலம் பயன்படுத்தலாம்.
இந்த ஏசிக்காக வீட்டின் மேற்கூரையில் Solar panels பொருத்தப்பட வேண்டும். அந்த பேனல்கள் மூலம் பகலில் வேலை செய்தாலும், இரவில் பேட்டரி சேமிப்பு மூலம் கூடுதல் மின்சாரத்தை பயன்படுத்தலாம்.
இதன் விலையை பொறுத்தவரை வழக்கமான ஏசியை விட அதிகம். ஆனால் உங்கள் மின் கட்டணம் பூஜ்ஜியமாகிவிடும்.
இந்த ஏசியில், Auto Start Mode, Turbo Cool Mode, Dry Mode, Sleep Mode, On-Off Timer, Auto Clean, Speed Setting, Lover Step Adjust, Glow button போன்ற வசதிகளை பெற முடியும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |