பிரான்சின் Mistral வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் உக்ரைனின் அண்டை நாடு
சுமார் 626 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள பிரெஞ்சு மிஸ்ட்ரல் (Mistral) வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கப்போவதாக ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வான் பாதுகாப்பு
பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடனான கூட்டு கொள்முதல் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிரான்சில் இருந்து வான் பாதுகாப்பு அமைப்புகளை ருமேனியா வாங்குகிறது.

MANPADS என அறியப்படும் மிஸ்ட்ரல் அமைப்புகளில் 231 எண்ணிக்கையும், பயிற்சி உட்பட 934 ஏவுகணைகளும் வாங்குவதற்காக பிரெஞ்சு பாதுகாப்பு அமைச்சகத்துடன் செவ்வாய்க்கிழமை ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆயுதங்கள் எப்போது ருமேனியாவிடம் ஒப்படைக்கப்படும் என்பது தொடர்பான தகவல் ஏதும் வெளியாகவில்லை. ருமேனிய அமைச்சரவை கொள்முதல் திட்டத்திற்கு முதன்முதலில் 2022 இல் ஒப்புதல் அளித்தனர்.
நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ருமேனியா சுமார் 650 கிமீ தொலைவுக்கு உக்ரைனுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.
டானூப் நதியின் குறுக்கே உள்ள கியேவின் துறைமுகங்களை ரஷ்யா தாக்கத் தொடங்கியதிலிருந்து, அதன் வான்வெளியில் ட்ரோன்கள் அத்துமீறி நுழைவதும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுவதும் அதிகரித்து வந்துள்ளது.

உக்ரைனுடன் கூட்டு
ருமேனியாவின் வான் பதுகாப்பில் தற்போது F-16 போர் விமானங்கள், பேட்ரியாட் அமைப்புகள், HIMARS ராக்கெட், தென் கொரியாவின் சக்திவாய்ந்த Chiron ஏவுகணைகள், ஜேர்மனியின் விமான எதிர்ப்பு Gepard துப்பாக்கிகள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பாதுகாப்பு நிதி முறையின் கீழ் ட்ரோன்களை உருவாக்க உக்ரைனுடன் கூட்டு சேரவும் ருமேனியா இலக்கு வைத்துள்ளது.
அத்துடன் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் இருந்து ட்ரோன் தாக்குதலை முறியடிக்கும் Merops அமைப்புகளை தங்கள் நாட்டில் நிறுவும் இறுதிகட்டத்தில் ருமேனியா உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |