சகித்துக்கொள்ள முடியாதவை: சுட்டு வீழ்த்திய விமானி - கொந்தளித்த ஜனாதிபதி
ரஷ்யாவின் மூன்றாவது ட்ரோன் விமானத்தை ரோமேனியா சுட்டு வீழ்த்தியது.
டானூப் நதிக்கு அப்பால்
ரோமேனியா, உக்ரைனுடன் 650 கிலோமீற்றர் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யாவின் தாக்குதல் நடப்பதில், அதன் விமானங்கள் வான்வெளியை மீண்டும் மீண்டும் மீறி வந்துள்ளன.
இந்த நிலையில், டானூப் நதிக்கு அப்பால் உள்ள உக்ரேனிய துறைமுகங்கள் மீதான தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தி வரும்போது, கருங்கடலுக்கு மேலே பறந்த ட்ரோன் விமானத்தை ரோமேனிய இராணுவம் சுட்டு வீழ்த்தியது.
ஜனாதிபதி நிகுசர் டான்
வெள்ளிக்கிழமை வரை ரோமேனியா எந்த ட்ரோன் விமானத்தையும் அழிக்காத நிலையில், ரோமேனிய விமானி ஒருவர் மக்கள் வசிக்காத பகுதியில் ஒன்றை பாதுகாப்பாக வீழ்த்தினார்.
இதன்மூலம் மொத்தமாக மூன்று நாட்களில் 3 ட்ரோன் விமானங்களை ரோமேனியா வீழ்த்தியுள்ளது.
ரோமேனிய ஜனாதிபதி நிகுசர் டான், "நேட்டோ உறுப்பு நாட்டின் வான்வெளியை தொடர்ச்சியாக மீறி வரும் செயல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மீறல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மற்றும் சகித்துக்கொள்ள முடியாதவை" என தெரிவித்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |