ருமேனியா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 2 ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்திய F-16 போர் விமானம்
Romanian F-16 Jets Shot Down 2 Drones Over Black Sea: கருங்கடல் பகுதியில் ருமேனியாவின் போர் விமானங்கள் அடையாளம் தெரியாத இரண்டு ட்ரோன்களை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத ட்ரோன்கள்
கருங்கடல் பகுதியில் ருமேனியா நாட்டின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு ஆளில்லா ட்ரோன்களை ருமேனிய ராணுவ விமானங்கள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுலினா(Sulina) கடலோர பகுதிக்கு தென்கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் கருடங்கடலின் ருமேனியா நாட்டின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்த 2 ட்ரோன்களை ருமேனிய ராணுவத்தின் F-16 ரக அதிநவீன போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
ருமேனிய எல்லைக்குள் முதல் ட்ரோன் உள்ளூர் நேரப்படி மாலை 17.59 மணிக்கு நுழைந்த நிலையில், அதிலிருந்து 2வது நிமிடத்தில் சந்தேகத்திற்குரிய ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதிலிருந்து சிறிது நேரத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 18.05 மணிக்கு நுழைந்த 2வது அடையாளம் தெரியாத ட்ரோன் எல்லைக்குள் நுழைந்த 5 வது நிமிடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
சுட்டு வீழ்த்தப்பட்ட அடையாளம் தெரியாத ட்ரோன்கள் எந்த நாட்டில் இருந்து ஏவப்பட்டது அல்லது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை அதிகாரிகளால் வழங்கப்படவில்லை.
இதற்கிடையில் கருங்கடல் பகுதியில் மீண்டும் பாதுகாப்பானதாக மாறும் என்று ருமேனிய வெளியுறவு அமைச்சர் ஓனா டோயு தன்னுடைய X தளத்தில் தெரிவித்துள்ளார்.