ஒரே பந்தில் 22 ஓட்டங்கள் - CPL தொடரில் மிரட்டிய ரொமாரியோ ஷெப்பர்ட்
CPL தொடரில் ஒரே பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து ரொமாரியோ ஷெப்பர்ட் மிரள வைத்துள்ளார்.
கரீபியன் லீக் T20 தொடர்
கரீபியன் லீக் T20 தொடர்(CPL) கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி தொடங்கி மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற கயானா அமேசான் வாரியர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகளுக்கு இடையியேயான போட்டியில், 4 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டம் ஆடிய அமேசான் வாரியர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் குவித்தது.
இதில் அதிகபட்சமாக மேற்கிந்திய தீவுகள் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட், 34 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உட்பட 73 ஓட்டங்கள் குவித்தார்.
ஒரு பந்தில் 22 ஓட்டங்கள்
இதில் ஒரு பந்தில் 22 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்தார். 15 வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஒஷேன் தாமஸ் வீச, அதை ரொமாரியோ ஷெப்பர்ட் எதிர்கொள்வார்.
Romario Shepherd Scores 20 Runs Off One Legal Ball In CPL. #CPL25 pic.twitter.com/PRk0PA2oLc
— Nibraz Ramzan (@nibraz88cricket) August 27, 2025
இதில், 3வது பந்தை முதலில் நோ பாலாக வீசுவார். அதன் பிறகு மறுபடியும் வீசப்பட்ட வைடு ஆக மாறியது. மீண்டும் வீசப்பட்ட பந்து நோ பாலாக வர ரொமாரியோ ஷெப்பர்ட் அதை சிக்ஸர் அடிப்பார்.
அதற்கு வீசப்பட்ட அடுத்த பந்திலும் ரொமாரியோ ஷெப்பர்ட் சிக்ஸர் அடிப்பார். அந்த பந்து நோ பாலாக அமைந்ததால் மீண்டும் 3வது பந்தை வீசுவார் அதிலும் ரொமாரியோ ஷெப்பர்ட் சிக்ஸர் அடிப்பார்.
இதன் மூலம் ஒரு சட்டபூர்வ பந்தில் ரொமாரியோ ஷெப்பர்ட் 22 ஓட்டங்கள் எடுத்துள்ளார். (நோ பால்(1), வைடு(1), நோ பால்(6)(1), நோ பால்(6)(1), 6 = 22)
ரொமாரியோ ஷெப்பர்ட் இதே போல், 2025 ஐபிஎல் தொடரில், CSK அணிக்கு எதிரான போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து, ஐபிஎல் தொடரின் 2வது அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |