ரோமில் இடிந்து விழுந்த 13ம் நூற்றாண்டு கோபுரம்: 11 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கிய தொழிலாளி
ரோமில் ஏற்பட்ட கோபுர கட்டிட விபத்தில் சிக்கி தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இடிந்து விழுந்த 13ம் நூற்றாண்டு கோபுரம்
மத்திய ரோமில் கோலியத்தின்(colosseum) அருகே அமைந்துள்ள Torre dei Conti என்ற 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோபுரம் இடிந்து விழுந்தது.

இதன் இடிபாடுகளில் தொழிலாளி ஒருவர் மாட்டிக் கொண்ட நிலையில், 11 மணி நேர நீண்ட தொடர் மீட்பு முயற்சிகளுக்கு பிறகு மீட்டெடுக்கப்பட்டார்.
மீட்பு முயற்சிகளின் போது கட்டிடம் மேலும் இடிந்து விழும் அபாயம் இருந்ததால் மீட்பு பணியாளர்கள் அதனையும் கருத்தில் கொண்டு போராடினர்.
இறுதியில் மீட்கப்பட்ட தொழிலாளி காயங்களால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
❌️ #Roma, estratto in vita dai #vigilidelfuoco e affidato ai sanitari per il trasporto in ospedale l'operaio bloccato sotto le macerie per il crollo della Torre dei Conti. Sul posto hanno operato 140 unità del Corpo nazionale [#3novembre 23: pic.twitter.com/lPr7gH8qD9
— Vigili del Fuoco (@vigilidelfuoco) November 3, 2025
இதனை தொடர்ந்து இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனி(Giorgia Meloni), தொழிலாளியின் துயரமான இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட நபர் ஆக்தே ஸ்ட்ரோய்சி என்று அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும், அவரது குடும்பத்தினருக்கும், சக ஊழியர்களுக்கும் உறுதுணையாக இருப்பதாகவும் பிரதமர் ஜார்ஜியா மெலோனி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்  |