2 கோல்கள் அடித்து தெறிக்கவிட்ட ரொனால்டோ! அல் நஸர் ஹாட்ரிக் வெற்றி
AFC சாம்பியன்ஷிப் லீக்கில் அல் நஸர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அல் டுஹைல் அணியை வீழ்த்தியது.
ரொனால்டோ அதிவேகமாக கோல்
Al-Awwal Park மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில், அல் நஸரின் தலிஸ்கா 25வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து சாடியோ மனே 56வது நிமிடத்தில் அல் நஸருக்காக இரண்டாவது கோல் அடித்தார்.
அதன் பின்னர் ஆட்டத்தின் 61வது நிமிடத்தில் ரொனால்டோ அதிவேகமாக கோல் அடிக்க, அல்-டுஹைல் அணியின் இஸ்மாயில் 63வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.
Twitter (@Cristiano)
ஹாட்ரிக் வெற்றி
அடுத்த 4 நிமிடங்களில் அல்மோஎஸ் அலி கோல் அடிக்க, அதற்கு 81வது நிமிடத்தில் ரொனால்டோ பதிலடி கொடுத்தார். மைக்கேல் ஒலுங்க 85வது நிமிடத்தில் அல்-டுஹைல் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் அல் நஸர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. வெற்றி குறித்து பதிவிட்ட ரொனால்டோ, ரியாத்தில் சிறப்பான இரவு - 3 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் குழுவில் முதலிடம்! 68 ஆண்டுகளை அல் நஸர் எட்டியதில் மகிழ்ச்சி என குறிப்பிட்டுள்ளார்.
Twitter (@Cristiano)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |