சவுதி இளவரசரை மீண்டும் சந்தித்த ரொனால்டோ! பெருமிதத்துடன் வெளியிட்ட பதிவு
சவுதியில் நடைபெற இருக்கும் Esports உலகக்கோப்பை அறிமுக விழாவில் இளவரசர் முகமது பின் சல்மானை நட்சத்திர வீரர் ரொனால்டோ நேரில் சந்தித்தார்.
Esports உலகக்கோப்பை
போர்த்துக்கல் நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி கிளப் அணியான அல் நஸரில் விளையாடி வருகிறார்.
அவரது சிறப்பான பங்களிப்பினால் அல் நஸர் அணி வெற்றிகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் 2024ஆம் ஆண்டு Esports உலகக்கோப்பை ரியாத்தில் தொடங்கும் என சவுதி அரேபியா நேற்று அறிவித்தது.
Reuters
இதுகுறித்து இளவரசர் வெளியிட்ட அறிக்கையில், Esports உலகக்கோப்பை சவுதி அரேபியாவின் பயணத்தின் இயல்பான அடுத்த படியாகும் என குறிப்பிட்டார்.
Reuters
ரொனால்டோவின் பதிவு
Esports உலகக்கோப்பையில் அறிமுக விழாவில் கலந்துகொண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ, சவுதி இளவரசரை சந்தித்து பேசினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 'இன்று அரச மேன்மை இளவரசர் முகமது பின் சல்மானை மீண்டும் சந்திப்பதில் பெருமை அடைகிறேன். மேலும் விளையாட்டின் எதிர்காலம் மற்றும் அடுத்த ஆண்டு சவுதி அரேபியாவில் நடைபெறவிருக்கும் முதல் Esports உலகக்கோப்பையை அறிமுகப்படுத்துவது குறித்து விவாதிக்கும் இந்தக் குழுவில் இன்று அங்கம் வகித்ததில் பெரும் மகிழ்ச்சி!' என தெரிவித்துள்ளார்.
An honour to meet again with His Royal Highness Prince Mohammed bin Salman and great to be part of this panel today discussing the future of esports and the launch of the first ever #esportsworldcup that will be held in Saudi Arabia next year! pic.twitter.com/1N4AVYn9Pv
— Cristiano Ronaldo (@Cristiano) October 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |