உலகக்கிண்ணத்தில் ஒன்றாக புதிய வரலாறு படைக்கப் போகும் மெஸ்ஸி, ரொனால்டோ
அதிக உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை, கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸி ஆகிய இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ரொனால்டோ, மெஸ்ஸி
அர்மேனியா அணிக்கு எதிரான வெற்றியைத் தொடர்ந்து போர்த்துக்கல் அணி 2026ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றது. 
எனவே கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த தொடரில் விளையாட உள்ளார். அவரது போட்டியாளரான லியோனல் மெஸ்ஸியும் இதில் களம் காண உள்ளார்.
இதன்மூலம் இருவரும் புதிய வரலாறு படைக்க உள்ளனர். அதாவது, அதிக உலகக்கிண்ண தொடர்களில் பங்கேற்ற வீரர்கள் என்ற சாதனையை ரொனால்டோ, மெஸ்ஸி செய்ய உள்ளனர். 
புதிய வரலாறு
இருவருக்கும் இது ஆறாவது உலகக்கிண்ண தொடர் ஆகும். இவர்கள் 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 ஆண்டுகளில் நடைபெற்ற தொடர்களில் விளையாடி இருக்கின்றனர். இதற்கு முன் ஐந்து முறை உலகக்கிண்ணத்தில் விளையாடியதே சாதனையாக இருந்தது. 
ஜேர்மன் ஜாம்பவான் லோதர் மத்தாஸ் மற்றும் மெக்சிகன் வீரர்கள் ரஃபேல் மார்க்வெஸ், அன்டோனியோ கார்வஜல் மற்றும் ஆண்ட்ரஸ் கார்டாடோ ஆகியோருடன் மெஸ்ஸி, ரொனால்டோ ஐந்து முறை பங்கேற்றவர்களாக இருந்தனர்.
முன்னதாக, 2026 உலகக்கிண்ணம் தனது கடைசி உலகக்கிண்ணம் என்பதை ரொனால்டோ உறுதிப்படுத்திய பின்னர் அடுத்த ஆண்டு விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |