சொன்னதை செய்து காட்டிய ரொனால்டோ! தலையால் முட்டி மிரட்டல் கோல்..புதிய சாதனை
கிறிஸ்டியானோ ரொனால்டோ முன்னர் ட்வீட் செய்ததைப் போலவே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அல்-நஸர் அணியை வெற்றி பெற வைத்தார்.
எதிரணிக்கு மாறிய கோல்
அல்-நஸர் எப்சி-மொனாஸ்டிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கிங் ஃபாட் மைதானத்தில் நடந்தது. ஆட்டத்தின் முதல் பாதியின் 42வது நிமிடத்தில் அல்-நஸர் வீரர் தலிஸ்கா அசத்தலாக கோல் அடித்தார்.
இரண்டாம் பாதியில் அல்-நஸர் வீரர்கள் எதிரணியை கதிகலங்க வைத்தனர். ஆனால், 66வது நிமிடத்தில் அல்-நஸரின் அலி லஜமி, கோலை தடுக்க தலையால் முட்டியதில் எதிரணிக்கு கோலாக அமைந்துவிட்டது.
ரொனால்டோ மிரட்டலான கோல்
எனினும் நட்சத்திர வீரர் ரொனால்டோ, தன்னிடம் வந்த பந்தை (72வது நிமிடம்) தலையால் முட்டி கோலாக மாற்றினார். அதன் பின்னர் மற்றொரு அல்-நஸர் வீரர் அப்துலேல அல் அம்ரி, 88வது நிமிடத்தில் கோல் கீப்பர் அசந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கோல் அடித்தார்.
Twitter (@Cristiano)
அடுத்த 2 நிமிடங்களில் அதே அணியின் அப்துலாஜிஸ் சவுத் கோல் அடித்தார். இறுதியில் அல்-நஸர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
முன்னதாக கடந்த போட்டி கோல்கள் இல்லாமல் டிராவில் முடிந்தபோது, வெற்றிக்காக தொடர்ந்து போராடுவோம் என ரொனால்டோ கூறியிருந்தார்.
Twitter (@Cristiano)
அவர் சொன்னதைப் போலவே இந்தப் போட்டியில் வெற்றி செய்து காட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் அல்-நஸர் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.
Twitter (@Cristiano)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |