தன்னை முந்திய எம்பாப்பே, ஹாரியை ஒரே போட்டியில் பின்னுக்குத் தள்ளி ரொனால்டோ முதலிடம்!
2023ஆம் ஆண்டில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல்
அல் நஸர் மற்றும் அல் இட்டிஹாட் அணிகளுக்கு இடையிலான போட்டி பிரின்ஸ் அப்துல்லா அல் பைசல் மைதானத்தில் நடந்தது.
இதில் அல் இட்டிஹாட் (Al-Ittihad) வீரர் அப்டெர்ரசாக் ஹம்டல்லாஹ் (Abderrazak Hamdallah) கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 19வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கோல் அடித்தார்.
பின்னர் அல் நஸரின் (Al Nassr) தலிஸ்கா 38வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் 2-1 என அல் நஸர் முன்னிலை வகித்தது.
ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் அப்டெர்ரசாக் மீண்டும் ஒரு கோல் அடிக்க, அதற்கு பதிலடியாக ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் (68வது நிமிடம்) இரண்டாவது கோலை அடித்தார்.
GES Sportfoto/Getty Images
அதிக கோல்கள்
அடுத்ததாக சாடியோ மானே (Sadio Mane) 75 மற்றும் 82வது நிமிடங்களில் கோல்கள் அடிக்க அல் நஸர் 5 - 2 என அபார வெற்றி பெற்றது.
இதற்கிடையில் ரொனால்டோ 2 கோல்கள் அடித்ததன் மூலம் 2023ஆம் ஆண்டில் அவரது கோல் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்தது.
Franco Arland/Getty Images
இதன்மூலம் அவர், தன்னை விட அதிக கோல்கள் அடித்திருந்த கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) மற்றும் ஹாரி கேன் (Harry Kane) ஆகிய இருவரையும் பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |