40 வயதிலும் பை சைக்கிள் கோல் அடித்த ரொனால்டோ - மிரண்ட ரசிகர்கள்
ரொனால்டோ அடித்த பை சைக்கிள் கோல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோ
கால்பந்து உலகின் ஜாம்பவானாக வலம் வரும் 40 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையையில் போர்ச்சுகல் அணிக்காக ஆறாவது முறையாக விளையாட உள்ளார்.

உலகக் கோப்பையையில், இதுவரை 5 முறை போர்ச்சுகல் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ, 22 போட்டிகளில் 8 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை.
உலகக்கோப்பையை வென்று அத்துடன் ஓய்வை அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது, சவுதி ப்ரோ லீக்கில்அல் நசர் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில், அல் நசர் மற்றும் அல் கலீஜ் அணிகள் மோதியது.
பை சைக்கிள் கோல்
இதில், ரொனால்டோ காற்றில் பறந்தபடி அடித்த பை சைக்கிள் கோல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக வீரர் பந்தை காற்றில் பாஸ் செய்ய, ரொனால்டோ காற்றில் பறந்தபடி பந்தை கோலுக்கு உதைத்து, தலைகீழாக சுழன்றபடி தரையிறங்குவார். கோல் கீப்பர் பந்தை தடுக்க முயன்ற போதும், பந்து கோலாக பதிவானது.
CRISTIANO RONALDO BICYCLE KICK GOAL! 🤯 pic.twitter.com/glqYrqekmu
— TC (@totalcristiano) November 23, 2025
40 வயதிலும், ரொனால்டோ காற்றில் பறந்தபடி கோல் அடித்ததை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்தனர்.
இந்த போட்டியில், 4-1 என்ற கோல் கணக்கில் அல் நசர் அணி வெற்றி பெற்றது.
ரொனால்டோ கடைசியாக 2018 ஆம் ஆண்டில் 2018 சாம்பியன்ஸ் லீக் காலிறுதிப் போட்டியில் ஜுவென்டஸுக்கு, tரியல் மாட்ரிட் அணிக்காக பை சைக்கிள் கோல் அடித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |