போர்ச்சுக்கல் அணிக்காக களமிறங்கும் மகன் - ரொனால்டோ நெகிழ்ச்சி பதிவு
போர்ச்சுக்கல் நாட்டின் கால்பந்து வீரரான கிறிஸ்டியனா ரொனால்டோ, கால்பந்து உலகின் ஜாம்பவானாக வலம் வருகிறார்.
இவருக்கு போர்ச்சுக்கல் மட்டுமன்றி உலகளவில் பெரும் ரசிகர் பட்டாளம் உண்டு.
ரொனால்டோவின் மகன்
இந்நிலையில், ரொனால்டோவின் மூத்த மகனான Cristiano dos Santos, போர்ச்சுகலின் 15 வயதுக்குட்பட்ட இளையர் அணியில் இணைய உள்ளார்.
குரோஷியாவில் நடைபெறவிருக்கும் விளாட்கோ மார்கோவிக் போட்டியில் ஜப்பான், கிரீஸ், இங்கிலாந்துடன் போர்ச்சுகல் மோத உள்ளது.
இந்த போட்டியில் போர்ச்சுகலின் அணி சார்பில் விளையாட உள்ளதன் மூலம், தனது முதல் அனைத்துலக கால்பந்து போட்டியில் களமிறங்குகிறார்.
போர்ச்சுகல் அணியின் அதிகாரப்பூர்வ வீரர்கள் பட்டியலை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த "உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் மகனே!" என பதிவிட்டுள்ளார்.
14 வயதான அவர், தற்போது சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் அணிக்காக விளையாடுகிறார். ரொனால்டோவும், தற்போது இந்த அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |