கோல் வேட்டையாடிய ரொனால்டோ! இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அல் நஸர்
கிங் சாம்பியன் கிண்ணத்தொடரின் அரையிறுதியில் அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் கலீஜ் அணியை வீழ்த்தியது.
ரொனால்டோ மிரட்டல்
அல் அவ்வல் மைதானத்தில் நடந்த கிங் சாம்பியன் கிண்ணத்தொடரின் அரையிறுதியில், அல் நஸர் (Al Nassr) மற்றும் அல் கலீஜ் (Al Khaleej) அணிகள் மோதின.
ஆட்டத்தின் 17வது நிமிடத்திலேயே நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) மிரட்டலாக கோல் அடித்தார்.
எதிரணி கோல் கீப்பர் தமது அணி வீரருக்கு பாஸ் செய்ய முயன்ற பந்தை, ரொனால்டோ அபாரமாக திருப்பி கோலாக மாற்றினார்.
அதனைத் தொடர்ந்து 20வது நிமிடத்தில் அல் நஸரின் கோல் முயற்சி, எதிரணி கோல் கீப்பரால் தடுக்கப்பட்டது. எனினும், 37வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், அல் நஸரின் சாடியோ மானே கோல் அடித்தார்.
வெற்றி
இரண்டாம் பாதியின் 57வது நிமிடத்தில், கார்னர் கிக்கில் இருந்து வந்த பந்தினை ரொனால்டோ வலையை நோக்கி கிக் செய்தார். அதனை கோல் கீப்பர் தடுத்து மீண்டும் ரொனால்டோவிடம் பந்து வர, அதனை கோலாக மாற்றினார்.
இதன்மூலம் அல் நஸர் 3-0 என ஆதிக்கம் செலுத்தியது. அல் கலீஜ் அணிக்கு ஒருவழியாக 82வது நிமிடத்தில் டோரைஸ் மூலம் கோல் கிடைத்தது.
இறுதியில் அல் நஸர் அணி (3-1) வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 31ஆம் திகதி அல் ஹிலாலை அந்த அணி எதிர்கொள்ள உள்ளது.
CR7 is at the double ⚽️⚽️
— AlNassr FC (@AlNassrFC_EN) May 1, 2024
Another great performance & goal from the GOAT ?⚡️ pic.twitter.com/MHSJ03F7oX
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |