ஆடம்பர விடுமுறையை கழிக்கும் ரொனால்டோ! யூரோ தோல்விக்கு பின் மனரீதியாக தயாராகும் ஜாம்பவான்
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பார்ட்னருடன் ஆடம்பர விடுமுறையை கழித்து வருகிறார்.
யூரோ கால்பந்து தோல்வி
போர்த்துக்கல் அணி யூரோ கால்பந்து தொடரில் வெளியேறியபோது நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) உடைந்து அழுதது ரசிகர்களை கவலையுற செய்தது.
எனினும், தனது கிளப் அணியான அல் நஸரின் புதிய சீசனுக்கு தயாராகும் வகையில் ரொனால்டோ சவுதி அரேபியா திரும்பினார்.
சீசனுக்கு முன்பாக இடைப்பட்ட விடுமுறை நாட்களை தனது குடும்பத்துடன் அவர் கழித்து வருகிறார்.
மகிழ்ச்சியுடன் ரொனால்டோ
தனது பார்ட்னர் ஜார்ஜினா ரோட்ரிகஸ் உடன் செங்கடல் கரையில் உலா வரும் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் ரொனால்டோ பதிவிட்டார்.
அதேபோல் தன் பிள்ளைகளுடனும் வீட்டின் அருகிலேயே அவர் பொழுதை கழித்து வருகிறார்.
இதுதொடர்பிலான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ''இது தான் என் வாழ்க்கை, மகிழ்ச்சியான நாட்கள்'' என ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |