பந்தை காலால் அடிப்பது போல பாசாங்கு செய்த ரொனால்டோ! ஏமாந்து கீழே விழுந்த எதிரணி வீரர் வீடியோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நம்பமுடியாத திறமைகளை வெளிப்படுத்தி அடித்த ஷாட்டின் மூலம் எதிரணி வீரரை கீழே விழ வைத்த வீடியோ வைரலாகியுள்ளது.
ரொனால்டோ
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ அல் நாசர் கிளப் அணிக்காக $200 மில்லியன் ஒப்பந்ததில் இணைந்தார். இதையடுத்து நேற்று முன் தினம் சவுதி ப்ரோ லீக் கால்பந்து தொடரில் அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிரான போட்டியில் தனது புதிய கிளப்பான அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
Las habilidades son sorprendentes de @Cristiano de verdad tiene 38 años?#Ronaldo? #CR7? #CristianoRonaldo #Ronaldo #VIVARONALDO #GOAT? #Bicho #CR700? #CristianoRonaldo? #AlNasr #HalaRonaldo #CR7?بث #GOAT?7
— Elia Maria VL ? (@eliamvl1) January 22, 2023
pic.twitter.com/T60oWIXoYx
தடுமாறி விழுந்த வீரர்
இப்போட்டியில் அல் நாசர் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அல்-எட்டிஃபாக் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் ரொனால்டோ கோல் எதுவும் அடிக்காத நிலையிலும் தனது சிறப்பான ஆட்டம் மூலம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க சில தருணங்களை வழங்கினார்.
அதன்படி போட்டியின் போது, ரொனால்டோ வலது காலால் பந்தை அடிப்பது போல போலியாக செய்கை செய்து பின் இடது காலால் அடித்தார். ஆனால் இதை சற்றும் எதிர்பார்க்காமல் ஏமாந்த எதிரணி வீரர் நிலைதடுமாறி விழுந்தார்.
ரொனால்டோவின் சமயோஜித புத்தியால் பந்து எதிரணி வீரரிடம் செல்லாமல் அல் நாசர் வீரரிடமே சென்றது.
இது தொடர்பான வீடியோ அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.