சவுதி அரேபியாவில் வாழ்க்கையின் முதல் பார்வையை வெளியிட்ட ரொனால்டோ: புகைப்படங்கள்
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் சவுதி அரேபியாவில் தங்களது வாழ்க்கை தொடர்பான முதல் பார்வை புகைப்படங்களை வழங்கியுள்ளனர்.
அல் நாசர் அணியுடன் புதிய ஒப்பந்தம்
கத்தார் உலக கோப்பை போட்டிகள் பிறகு மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தற்போது சவுதி அரேபியாவின் கால்பந்து கிளப் அணியான அல் நசாருடன் 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் இணைந்துள்ளார்.
37 வயதான அவர் ஏற்கனவே சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத்திற்குச் சென்று தன்னுடைய புதிய அணியுடன் பயிற்சியை தொடங்கியுள்ள ரொனால்டோ, ஃபிபா கால்பந்து சம்மேளனம் விதித்துள்ள தடையால் இன்னும் தன்னுடைய புதிய கிளப்பிற்காக அறிமுகமாகவில்லை.
Quality time with my loves ❤️ pic.twitter.com/1kQk9aUkOs
— Cristiano Ronaldo (@Cristiano) January 16, 2023
சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப்பில் இணைந்துள்ள ரொனால்டோ தற்காலிகமாக வசிப்பதற்காக மாதம் £ 2,50,00 செலவாகும் “கிங் சூட்” வசதி கொண்ட சொகுசு ஹோட்டல் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளது.
99 தளம் கொண்ட இந்த சொகுசு ஹோட்டலில் 17 அறைகளை உள்ளடக்கிய இரண்டு தளங்கள் (48 மற்றும் 50) ஒதுக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியாவில் வாழ்க்கையின் முதல் பார்வை
இந்நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் சவுதி அரேபியாவில் தங்களது வாழ்க்கை தொடர்பான முதல் பார்வை புகைப்படங்களை வழங்கியுள்ளனர்.
அதில் ரொனால்டோவும் அவரது குடும்பத்தினரும் தலைநகரில் உள்ள விண்டர் வொண்டர் லேண்ட் தீம் பார்க் சென்றுள்ளதை காட்டியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ரொனால்டோ மற்றும் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
ரொனால்டோ சவுதி அரேபியாவிற்கு வந்ததிலிருந்து தனது குடும்பத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ளும் முதல் இடுகை இதுவாகும்.