அரையிறுதிக்கு தயாராவதில் கவனம் செலுத்துகிறேன்..ரமலான் வாழ்த்துக்கள்..ரொனால்டோவின் பதிவு
கிங் கப் ஆஃப் சாம்பியன்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு தயாராவதாக அல்-நஸர் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவிட்டுள்ளார்.
அரையிறுதியில் அல்-நஸர்
ஏப்ரல் 24ஆம் திகதி அல்-நஸர் மற்றும் அல்-வெஹ்டா அணிகள், கிங் கப் ஆஃப் சாம்பியன்ஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதுகின்றன.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பயிற்சியில் தீவிர கவனம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.
@Getty Images
இதற்கிடையில், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் இன்றைய தினம் ரமலானை கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் ரொனால்டோ கூறியுள்ளார்.
ரொனால்டோவின் பதிவு
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'அரையிறுதிப் போட்டிக்கு தயாராவதில் கவனம் செலுத்துகிறேன். இன்று ரமலானை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார். மேலும், அவர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Focus in preparation for semi-final ??#EidMubarak to all those celebrating today. pic.twitter.com/tr4ql651zh
— Cristiano Ronaldo (@Cristiano) April 21, 2023
முன்னதாக அல்-ஹிலால் அணிக்கு எதிராக அல்-நஸர் அணி தோல்வியை தழுவியது.
போட்டி முடிந்ததும் மெஸ்சி என கத்திய ரசிகர்களை நோக்கி ரொனால்டோ செய்த செய்கை சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.