ரொனால்டோ - ஜார்ஜினா திருமணம்: 5 குழந்தைகள் முன்னிலையில் கோலாகலமாக நிறைவு
போர்ச்சுக்கலில் ரொனால்டோ மற்றும் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் திருமணம் கோலாகலமாக நிறைவடைந்துள்ளது.
ரொனால்டோ - ஜார்ஜினா திருமணம்
கால்பந்து உலகின் புகழ்பெற்ற ஜாம்பவான் வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய நீண்ட நாள் காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு, தங்களுடைய திருமண மோதிரத்துடன் கூடிய புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்து இந்த மகிழ்ச்சியான திருமண செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர்.

போர்ச்சுக்கலில் நடைபெற்ற திருமணம்
போர்ச்சுக்கல் நாட்டின் காஸ்காய்ஸ் நகரில் தங்களது 5 குழந்தைகள் சூழ மிகவும் ரகசியமாக இந்த திருமணத்தை ரொனால்டோ - ஜார்ஜினா ஜோடி செய்து கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ரொனால்டோ உடன் நடைபெற்ற திருமணம் நிச்சயதார்த்தம் குறித்து ரோட்ரிக்ஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.
அதில், “ஆம் நான் சம்மதிக்கிறேன், இந்த மற்றும் அனைத்து பிறவிகளிலும்” என்று மறைமுகமாக சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
தசாப்த கால காதல்
32 வயது ரோட்ரிக்ஸும், 41 வயது ரொனால்ட்டோவும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாட்ரிட் நகரில் சந்தித்துக் கொண்டனர்.

ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய போது, ரோட்ரிக்ஸ் அங்குள்ள Gucci அங்காடியில் விற்பனை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.
மேலும், ரோட்ரிக்ஸ் மாடலாகவும் தன்னுடைய தனி முத்திரையை பதித்துள்ளார்.
ரொனால்டோ - ஜியார்ஜினா தம்பதிக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், ஈவா மரியா, மாட்டீயோ, அலானா, பெல்லா என்ற 5 குழந்தைகள் உள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |