உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்: 12 பேர் வரை உயிரிழப்பு
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
நள்ளிரவில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 12 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் வட கொரிய ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி இருப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.

மாஸ்கோ மற்றும் வடகொரியா இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருவதாகவும், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு ஆயுதங்களையும், வீரர்களையும் வடகொரியா வழங்கி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனில் ஏற்பட்ட பாதிப்பு
ஜபோரிஜியாவின் தென்கிழக்குப் பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டனர். மற்றும் 19 பேர் வரை காயமடைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டொனெட்ஸ்க் மற்றும் டனிபரோபெட்ரோவ்ஸ்க் ஆகிய பகுதியில் நடந்த தாக்குதலில் 6 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
தலைநகர் கீவ் மற்றும் அங்குள்ள தொற்று நோய் மருத்துவமனை ஆகியவை மீதும் நேரடி தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |