100வது கோல் அடித்த ரொனால்டோ! வரலாற்றில் சாதனை படைத்த ஒரே வீரர் (வீடியோ)
சவுதி சூப்பர் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் அல் நஸர் அணி தோல்வியடைந்ததால், ரொனால்டோவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
100வது கோல்
ஹாங் காங் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் அல் நஸர் மற்றும் அல்-அஹ்லி சவுதி அணிகள் மோதின.
O Cristiano Ronaldo chegou aos 100 gols com a camisa do Al Nassr.
— DataFut (@DataFutebol) August 23, 2025
Faltam 61 gols para o Gol 1000.
pic.twitter.com/EV18QC8qI3
ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இது அல் நஸர் அணிக்காக அவர் அடித்த 100வது கோல் ஆகும்.
வரலாற்று சாதனை
இதன்மூலம் நான்கு நாடுகளின் 4 கிளப் அணிகளுக்காக 100 கோல்கள் அடித்த ஒரே வீரர் எனும் வரலாற்று சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) படைத்தார்.
இந்தப்போட்டி ஆட்டநேர முடிவில் 2-2 என சமன் ஆனது. இதன் காரணமாக பெனால்டி ஷூட்அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
இதில் அல்-அஹ்லி சவுதி (Al-Ahli Saudi) 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |