யூரோ 2024 போர்த்துக்கல் vs செக் குடியரசு: ரசிகர்களுக்கு ரொனால்டோ செய்தி!
செக் குடியரசுக்கு எதிராக இன்று இரவு போர்த்துக்கல் தங்களின் யூரோ 2024 பயணத்தை தொடங்க உள்ளது.
இந்த போட்டியில் நாட்டு மக்களுக்கும் ரசிகர்களுக்கும் உணர்ச்சிபூர்வமான செய்தியை கிறிஸ்டியானோ ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டில் முதல் முறையாக போட்டியை வென்ற போர்ச்சுகல் அணி, இந்த முறை செக் குடியரசு, துருக்கி மற்றும் புதிதாக பங்கேற்கும் ஜார்ஜியா ஆகிய அணிகளுடன் குழு எஃப் பிரிவில் உள்ளது.
Portugueses,
— Cristiano Ronaldo (@Cristiano) June 18, 2024
Hoje começa mais um capítulo da nossa história. Lembro-me com carinho do meu primeiro dia com a seleção, uma jornada repleta de desafios e vitórias. Agora, tenho a honra de estar novamente ao lado de uma equipa de campeões, cheia de talento e determinação. Com a… pic.twitter.com/ITTwyDtfKe
2022 உலகக் கோப்பைக்குப் பிறகு 2016 ஆம் ஆண்டின் வெற்றி பெற்ற பயிற்சியாளர் Fernando Santos ராஜினாமா செய்ததை அடுத்து, முன்னாள் பெல்ஜியம் தேசிய அணி பயிற்சியாளர் Roberto Martinez தற்போது போர்ச்சுகல் அணியை வழிநடத்துகிறார்.
போர்ச்சுகல்லுக்கு ரொனால்டோவின் செய்தி
இன்றைய போட்டியில் களமிறங்கும் போது, ரொனால்டோ தனது ஆறாவது யூரோ போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்.
UEFA.com தகவலின்படி, ஆண்கள் பிரிவில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனையை இவர் படைக்க உள்ளார்.
அல்-நாசர் அணிக்காக விளையாடும் தேசிய அணித் தலைவர், சமூக வலைதளங்களில் தனது நாட்டு மக்களுக்கு செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது அவரது கடைசி யூரோ போட்டியாக இருக்கலாம் என்பதால், அவர் தனது நாட்டு மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |