1000 கோல்களை துரத்தவில்லை! இரட்டை கோல் அடித்து அதிரவிட்ட ரொனால்டோ
கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்கள் அடிக்க, அல் நஸர் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அல் ஹிலால் அணியை வீழ்த்தியது.
கிங்டம் அரேனா மைதானத்தில் நடந்த போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஹிலால் அணிகள் மோதின.
ஆட்டத்தின் 45+4 நிமிடத்தில் அல் நஸர் வீரர் அலி அல்ஹஸன் அபாரமாக கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, சாடியோ மானே பாஸ் செய்த பந்தை மின்னல் வேகத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) கோலாக மாறினார்.
மேலும், 88வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் ரொனால்டோ இரண்டாவது கோல் அடித்தார்.
அதன் பின்னர் அல் ஹிலால் வீரர் அலி அல்புலய்ஹி (62வது நிமிடம்) கோல் அடித்தாலும், அல் நஸர் அணியின் அரணை தகர்த்து மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அல் நஸர் (Al-Nassr) அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ரொனால்டோ இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் அவரது மொத்த கோல்களின் எண்ணிக்கை 931 ஆக உயர்ந்தது.
இதுகுறித்து பேசிய ரொனால்டோ, "இந்த தருணத்தை, நிகழ்காலத்தை அனுபவிப்போம். நான் 1,000 கோல்களைத் துரத்தவில்லை. அது சரியானதாக இருந்தால், ஆம். சரியானதாக இல்லாவிட்டால், இல்லை.
அந்த தருணம் மிகவும் சிறப்பு வாய்ந்த விடயம், அது என்ன வரப்போகிறது என்பதல்ல. நான் அந்த தருணத்தை ரசித்தேன்.
அது ஒரு சிறந்த வெற்றி, நான் கோல் அடித்ததால் அல்ல - அல் ஹிலாலுக்கு எதிராக இரண்டு கோல்களை அடித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் - ஆனால் டெர்பியை வெல்வது மிக முக்கியமானது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |