உலக கோப்பை தோல்விக்கு பிறகு...பழைய கால்பந்து கிளப்பிற்கே திரும்புகிறாரா ரொனால்டோ? முக்கிய தகவல்
உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகியதை அடுத்து தற்போது மீண்டும் தன்னுடைய பழைய அணியான ரியல் மாட்ரிட்டுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
மான்செஸ்டரில் இருந்து விலகல்
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கும் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் தலைமை பயிற்சியாளருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி கொண்டு இருந்தது.
இதனை தொடர்ந்து கத்தாரில் கால்பந்து உலக கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு மான்செஸ்டர் யுனைடெட் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்டோ விலகுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
Cristiano Ronaldo- கிறிஸ்டியானோ ரொனால்டோ(Twitter )
ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து விலகியதை அடுத்து அவரை தங்கள் கிளப்பில் இணைத்து கொள்ள பல அணிகள் போட்டி போட்டு கொண்டு இருக்கும் நிலையில், சவுதி அரேபியாவின் அல்-நாஸ்ர் கிளப் அவரை பெரிய தொகையுடன் ஒப்பந்தம் செய்வதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
தகர்ந்த உலக கோப்பை கனவு
உலக கோப்பை போட்டிகள் நிறைவடையும் வரை போர்ச்சுகல் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது களமிறக்கப்படாமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.
அத்துடன் காலிறுதி போட்டியில் கடைசி நேரத்தில் மாற்று வீரராக மட்டுமே களமிறக்கப்பட்டார். இந்நிலையில் மொரோக்கோ அணியுடனான காலிறுதி போட்டியில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.
Cristiano Ronaldo- கிறிஸ்டியானோ ரொனால்டோ(Twitter)
இதனால் 37 வயதாகும் ரொனால்டோவுக்கு கடைசி உலக கோப்பை என்று கருதப்பட்ட நிலையில், வெற்றி மகுடத்தை சூட முடியாமல் வருத்தத்தில் மைதானத்தில் ரொனால்டோ கண்ணீர் விட்டு கதறினார்.
அடுத்த உலகக் கோப்பை போட்டி தொடங்கும் போது ரொனால்டோவுக்கு 41 வயது ஆகியிருக்கும். ஆனால், அவர் விரும்பினால், நிச்சயமாக 2024 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கு மீண்டும் வர வாய்ப்பு உள்ளது.
பழைய அணியுடன் பயிற்சி
மான்செஸ்டர் அணியில் இருந்து விலகிய பிறகு சவுதி அணியுடன் ரொனால்டோ ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளிவரும் நிலையில், ரொனால்டோ தன்னுடைய பழைய கிளப்பான ரியல் மாட்ரிட் அணியுடன் பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது.
AFP/Getty Images
இது தொடர்பாக ஸ்பானிய ஊடகம் ரெலிவோவின் கூற்றுப்படி, ரொனால்டோ ரியல் மாட்ரிட்டின் வால்டெபேபாஸ் தளத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும், மூத்த நட்சத்திரம் தனது உடற்தகுதியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் பயிற்சி பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
அத்துடன் பயிற்சி மைதானத்தில் ரொனால்டோவின் "தனிப்பட்ட அமர்வு" அங்கு இருந்த பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது என்று அது கூறப்படுகிறது.
மேலும் கிளப்புடன் உறவு இன்னும் வலுவாக இருப்பதால், CR7க்கு உதவுவதில் ரியல் மாட்ரிட் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.
? Florentino Pérez has told Cristiano Ronaldo that Real Madrid is his home & he can train there anytime. @diarioas pic.twitter.com/B7KIKFTNtt
— Everything Cristiano ? (@EverythingCR7_) December 14, 2022