இறுதிப்போட்டிக்குள் நுழைந்துவிட்டோம்! வெற்றி கோல் அடித்த ரொனால்டோவின் பதிவு
அரபு கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் அல்-நஸர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அரையிறுதிப் போட்டி
பிரின்ஸ் சுல்தான் மைதானத்தில் நடந்த அரபு கிளப் அரையிறுதிப் போட்டியில் அல் நஸர் மற்றும் அல் ஷார்ட்டா அணிகள் மோதின.
இரு அணிகளும் சம பலத்துடன் மோதியதால் முதல் பாதியில் கோல் ஏதும் விழவில்லை. இரண்டாம் பாதியின் 74வது நிமிடத்தில் அல் நஸர் வீரரை எதிரணி வீரர் தள்ளிவிட பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
Al Nassr
அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ரொனால்டோ அபாரமாக கோல் அடித்தார். அதுவே அணியின் வெற்றி கோலாகவும் மாறியது.
கடைசி வரை அல் ஷார்ட்டா அணியை கோல் அடிக்க விடாமல் பார்த்துக் கொண்ட அல் நஸர், இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ரொனால்டோ நெகிழ்ச்சி பதிவு
12ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அல் நஸர் அணி அல் ஹிலாலை எதிர்கொள்கிறது.
போட்டி முடிந்தது குறித்து ரொனால்டோ வெளியிட்ட பதிவில், 'இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டோம்! அணி அருமையாக வேலை பார்த்துள்ளது! அற்புதமான ஆதரவு மற்றும் எங்களை முன்னேறி செல்ல உந்துதல் கொடுக்கும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
Final - here we go!!💪🏼
— Cristiano Ronaldo (@Cristiano) August 9, 2023
Good work team!
Special thanks to our fans for the amazing support and for always pushing us forward! 🙌🏼💛💙 pic.twitter.com/iuxE88DRSr
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |