திரும்ப வந்து தெறிக்கவிட்ட ரொனால்டோ: கதிகலங்கிய எதிரணி..அல்-நஸர் அபார வெற்றி
சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் நஸர் 5-2 என்ற கோல் கணக்கில் அல்-நஜ்மா அணியை வீழ்த்தியது.
ரொனால்டோ மிரட்டல்
ரியாத்தின் அலவ்வால் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் அல்-நஸர் மற்றும் அல்-நஜ்மா அணிகள் மோதின.
காயத்தில் இருந்து மீண்டு வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) இப்போட்டியில் களமிறங்கினார்.
இப்போட்டியானது சவுதி கிளப்பிற்காக லீக்கில் (Al-Nassr) ரொனால்டோவின் 100வது போட்டியாக அமைந்தது. ஆட்டத்தின் 44வது நிமிடத்தில் அல்-நஜ்மா வீரர் ரகன் ரஜே அல்துலயி கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து 45+8 நிமிடத்திலேயே அல்-நஸரின் அப்துல்லா அல்-ஹம்தான் பதிலடி கோல் அடித்தார்.
சாடியோ மானே கோல்
நட்சத்திர வீரர் சாடியோ மானே (Sadio Mane) 45+9வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதியில் அல்-நஸர் அணி 2-1 என முன்னிலை வகித்தது.
பின்னர் இரண்டாம் பாதியின் தொடக்கத்திலேயே ஃபெலிப் கார்டோசோ (47வது நிமிடம்) கோல் அடித்து நெருக்கடி கொடுத்தார். ஆனால், 56வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார்.
அடுத்து 73வது நிமிடத்திலும் அவர் கோல் அடித்தார். கடைசிக் கட்டத்தில் சாடியோ மானே (90+5) கோல் அடிக்க, அல்-நஸர் 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |