ஒலிம்பிக் வீரர்களை வியக்கவைத்த ரோபோக்கள்: குவியும் பாராட்டுக்கள்
குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்குபெற்றுள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு உணவு வழங்குதல் போன்ற பிற சேவைகளுக்கு ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சீன தலைநகர் பீஜிங்கில் 2022ஆம் ஆண்டுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.உலக அளவில் இன்னும் கொரோனா பரவல் முடிவடையாத நிலையில், இப்போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் என இரண்டிற்கும் சேர்த்து ஒரு புதிய நகரத்தையே சீன அரசாங்கம் உருவாகியுள்ளது. பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நகரத்தில் விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாக ஊழியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அதனை சார்ந்தவர்கள் மட்டுமே இருக்கும் வகையில் இந்த நகரத்தை சீனா கட்டமைத்துள்ளது.
A Beijing hotel is using room service robots as the Winter Olympics approaches. Robots arrive at the guest's door, the guest types a pin code into the robot and the robot opens to reveal the food. Once the guest has taken the food out the robot closes and moves off pic.twitter.com/NRbDCvhQBg
— Reuters (@Reuters) January 27, 2022
இந்த ஏற்பாடு என்பது விளையாட்டு வீரர்களுக்கோ, அல்லது ஒலிம்பிக் நிர்வாகிகளுக்கோ, பெய்ஜிங் மக்களிடம் இருந்து கொரோனா பரவாமல் இருப்பதற்காக கட்டமைக்கப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வீரர்கள் அனைவரும் பயோ பபிள் எனப்படும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஓட்டல் ஊழியர்களிடம் இருந்து வீரர்களுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பணிவிடை செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த ரோபோக்கள், வீரர்களுக்கு காதில் மாட்டி பாட்டு கேட்கும் இயர்பாட்கள், உணவு உள்ளிட்ட பல பணிவிடைகளை மேற்கொள்கின்றன. அறைகளில் இருந்து உணவுகளை வீரர்கள் ஆர்டர் செய்தால், அவர்கள் தங்கி இருக்கும் அறைக்கு முன் இந்த ரோபோக்கள் வந்து நிற்கிறது. அதன் பின் வீரர்கள் அந்த ஆர்டர் காண குறியீடு எண்ணை அந்த ரோபோக்களில் பதிவிட்டால் உணவு மற்றும் பிற சேவைகளை செய்கின்றனர். அதைபோலவே அறையின் கூரையிலிருந்து உணவை டெலிவரி செய்யும் முறையும் பயன்பாட்டில் உள்ளது.
போட்டிகள் நடைபெறும் நகரை விட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் வெளியில் செல்ல வேண்டுமென்றால் அதற்காக பிரத்யேகமாக தனி வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.மேலும் இந்த வாகனங்கள் பயணிக்க சாலையில் தனி வழித்தடம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் பிற வாகனங்கள் பயணிக்க அனுமதி இல்லை.
ஒருவேளை ஒலிம்பிக் சார்ந்த வாகனங்கள் அந்த வழித்தடத்தில் பயணிக்கும் போது விபத்து ஏற்பட்டாலும் கூட பொதுமக்கள் அவர்கள் அருகே செல்ல வேண்டாம் என்று கடுமையான கொரோனா கால கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.