தித்திக்கும் சுவையில் ஆரோக்கியமான ரோஸ் குல்கந்து.., வீட்டிலேயே செய்வது எப்படி?
இந்த ரோஸ் குல்கந்தை தினமும் சாப்பிட்டால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.
வடமாநில திருமண நிகழ்வுகளில் ஸ்வீட் பீடாவில் இந்த ரோஸ் குல்கந்தை கொஞ்சமாக வைப்பார்கள்.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் ஆரோக்கியமான ரோஸ் குல்கந்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பன்னீர் ரோஸ்- ¼kg
- கற்கண்டு- 10 ஸ்பூன்
- தேன்- 8 ஸ்பூன்
செய்முறை
முதலில் பன்னீர் ரோஜாவை தண்ணீரில் கழுவி இரண்டு மணி நேரம் வெயிலில் காயவிட்டு மிக்ஸி ஜாரில் மாற்றி ஒன்றிரண்டாக அரைக்கவும்.
பின் கற்கண்டை மிக்ஸியில் போட்டு பன்னீர் ரோஸ் உடன் அரைக்கவும்.
அடுத்து அடுப்பில் ஒரு வாணலல் வைத்து அதில் அரைத்த கலவையை சேர்த்து தேன் ஊற்றி மிதமான சூட்டில் 5 நிமிடங்களுக்கு கலந்துவிடவும்.
இறுதியாக இதனை பாட்டிலுக்கு மாற்றி இன்னும் 2 ஸ்பூன் தேன் ஊற்றி ஒரு வாரம் நன்கு ஊறவிட்டு அதன் பிறகு சாப்பிடலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |