முடியில் நீளத்தை முட்டி வரை அதிகரிக்க இந்த ஒரு பூ போதும்: எப்படி பயன்படுத்துவது?
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை முடி உதிர்வு தான். முடி ஒருவரை அழகாக காட்டக்கூடியது.
முக்கியமாக பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சனைகள் இருக்கும்.
அந்தவகையில், அடர்த்தியாகவும் நீளமாகவும் முடி வளர்ச்சியை அதிகரிக்க ரோஜா பூ போதும்.
தேவையான பொருட்கள்
- ரோஜா- 2
- கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்
- தயிர்- 1 ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் ரோஜா பூவின் இதழ்களை நன்றாக அரைக்கவும்.
பின் இந்த ரோஜா பேஸ்டுடன் கற்றாழை ஜெல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து இந்த ஹேர் மாஸ்க்கை கூந்தல் முழுவதும் தடவவும்.
இதற்கடுத்து ஒரு மணி நேரம் கழித்து உணவுகள் கூந்தலை மென்மையான ஷாம்பூ கொண்டு வெதுவெதுப்பான நீரில் அலசிக்கொள்ளலாம்.
இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை தொடர்ந்து தலைமுடியில் பயன்படுத்தி வர முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |