ஸ்டம்பை மிதித்த துடுப்பாட்ட வீரர்.. ஆனால் அவுட் இல்லை.. சிரிப்பலையில் அரங்கம்
வாணவேடிக்கை காட்டிய ரோஸோவ் 48 பந்துகளில் தனது முதல் சதத்தை அடித்தார்
விக்கெட் கீப்பர் டிகாக் 43 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார்
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரோஸோவ் ஸ்டாம்ப்பை மிதித்த சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இண்டூரில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நடந்து வருகிறது. முதலில் துடுப்பாட்டம் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் ரிலீ ரோஸோவ் ருத்ர தாண்டவம் ஆடினார்.
சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் அதிரடியாக அரைசதம் அடித்தார். அவரை அவுட் செய்ய இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர். இந்த நிலையில் ஆட்டத்தின் 17வது ஓவரை வீசிய சிராஜ் நோ-பால் வீசினார்.
Ohh No ? It would have been a wicket of Rilee Rossouw. If Siraj had Bowled. #INDvSA #INDvsSA pic.twitter.com/u3uG0BZ6EN
— Sushil Kengare. (@KengareA) October 4, 2022
இதனால் அடுத்த பந்து பிரீஹிட் என அறிவிக்கப்பட்டது. பிரீஹிட் பந்தை அவர் வீசும்போது எதிரணி வீரர் ரோஸோவ் ஆர்வமிகுதியால் பின்னே செல்ல ஸ்டம்பை மிதித்து விட்டார்.
ஆனாலும் அவர் அதை பற்றி கவலைப்படாமல் பந்தை எதிர்நோக்கி நின்றார். இதை பார்த்த சிராஜ் பந்துவீசிவதை சிரித்துக் கொண்டே நிறுத்திவிட்டார். சிராஜ் மட்டுமன்றி மொத்த அரங்கமும் ரோஸோவின் செயலால் சிரித்தது.
South Africa have posted a mammoth total ?
— ICC (@ICC) October 4, 2022
Can India chase it down? ?#INDvSA | ? Scorecard: https://t.co/Za8J5e3abK pic.twitter.com/KvSoMtuBDm