அஸ்வினின் அணியை சம்பவம் செய்த பாப் டூ ப்ளெஸ்ஸிஸ்: அனல் பறந்த ஆட்டம்
Rotterdam Dockers win by 7 wickets: ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில் ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டப்ளின் கார்டியன்ஸ் அணிக்கு எதிரான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டியில், ரோட்டர்டாம் டக்கர்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஜேம்ஸ் வின்ஸ் 95 ஓட்டங்கள்
ரோட்டர்டாம் டக்கர்ஸ் மற்றும் டப்ளின் கார்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐரோப்பிய டி20 பிரீமியர் லீக் போட்டி வூர்பர்க்கில் நடந்தது.
முதலில் ஆடிய டப்ளின் கார்டியன்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் எடுத்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் வின்ஸ் (James Vince) ஆட்டமிழக்காமல் 95 (54) ஓட்டங்கள் விளாசினார்.
சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி 26 (17) ஓட்டங்களும், விஜய் ஷங்கர் 26 (13) ஓட்டங்களும் எடுத்தனர். மெர்வ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய ரோட்டர்டாம் டக்கர்ஸ் அணியில் மைக்கேல் லேவிட் 14 பந்துகளில் 35 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
பாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன்
அடுத்து களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 18 ஓட்டங்களில் வெளியேற, அணித்தலைவர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் (Faf du Plessis) அதிரடியாக 51 பந்துகளில் 79 ஓட்டங்கள் விளாசினார்.
ஹெய்ன்ரிச் கிளாசென் ஆட்டமிழக்காமல் 34 (28) ஓட்டங்கள் விளாச, ரோட்டர்டாம் டக்கர்ஸ் 18.4 ஓவர்களில் 179 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜோஷுவா லிட்டில் 2 விக்கெட்டுகளும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பாப் டூ பிளெஸ்ஸிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |