ஐரோப்பிய நாடொன்றில் பகீர் சம்பவம்... அதிகாரிகள் வெளியிட்ட பின்னணி
நெதர்லாந்தில் நீளமான இரு கத்திகளுடன் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரால் திடீரென்று அப்பகுதி பரபரப்பாகியுள்ளது.
அரேபிய மொழியில்
நெதர்லாந்தின் Rotterdam பகுதியிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இன்னொருவர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல்தாரி பொலிசாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. வழிபோக்கர் ஒருவரே, துணிச்சலாக அந்த தாக்குதல்தாரியை மடக்கிப் பிடித்துள்ளார். வெளியான தகவலின் அடிப்படையில், அந்த நபர் அரேபிய மொழியில் கடவுள் மிகப் பெரியவர் என முழக்கமிட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட நபரும் படுகாயமடைந்துள்ளதாக கூறுகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முழு வீச்சில் நடப்பதாகவும், நேரில் பார்த்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.
Rotterdam பகுதியில் Erasmus பாலத்தின் அருகிலேயே தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து பொலிசார் மற்றும் அவசர உதவிக் குழுவினர் சம்பவயிடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
தாக்குதலுக்கு உண்டான நோக்கம்
Erasmus பாலத்தின் அடியில் வைத்தே தாக்குதல் நடந்துள்ளது. தாக்குதலின் போது அந்த நபர் கடவுள் மிகப் பெரியவர் என அரேபிய மொழியில் முழக்கமிட்டுள்ளதும் பலர் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதலுக்கு உண்டான நோக்கம் தொடர்பில் தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்றும், ஆனால் பொலிசார் தீவிரமாக விசாரித்துவருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்டவர் புகலிடக் கோரிக்கையாளரா அல்லது குடியுரிமை பெற்றவரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் அதிகாரிகள் வெளியிடவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |