தசுன் ஷானகா, பாவெல் அதிரடியில் மகுடம் சூடிய துபாய் கேபிட்டல்ஸ்! வீணான சாம் கர்ரனின் அரைசதம்
இன்டர்நெஷனல் லீக் டி20 கிண்ணத்தை துபாய் கேபிட்டல்ஸ் வென்றது.
ஹோல்டன்-சாம் கர்ரன் அரைசதம்
துபாயில் நடந்த இன்டர்நெஷனல் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் டெஸெர்ட் வைப்பர்ஸ் மற்றும் துபாய் கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
டெஸெர்ட் வைப்பர்ஸ் (Desert Vipers) முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. குர்பாஸ் (5), ஹேல்ஸ் (5) இருவரும் மெக்காய் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த லாரன்ஸ் 10 ஓட்டங்களில் வெளியேறினார். எனினும் மேக்ஸ் ஹோல்டன் மற்றும் சாம் கர்ரன் இருவரும் அதிரடியில் மிரட்டினர்.
Well played, skip! 👏🏼#Final #DPWorldILT20 #TheFinalPush #AllInForCricket pic.twitter.com/dnpfZltXq4
— International League T20 (@ILT20Official) February 9, 2025
இதன்மூலம் டெஸெர்ட் அணி 189 ஓட்டங்கள் குவித்தது. ஹோல்டன் 76 (51) ஓட்டங்கள் விளாசினார். அணித்தலைவர் சாம் கர்ரன் 33 பந்துகளில் 3 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்கள் எடுத்தார்.
ஷாய் ஹோப் 43
பின்னர் ஆடிய துபாய் கேபிட்டல்ஸ் (Dubai Capitals) அணியில் ஷாய் ஹோப் (Shai Hope) மட்டும் நின்று ஆட வார்னர், நைப், பில்லிங்ஸ் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர்.
சாம் கர்ரனின் ஓவரில் ஷாய் ஹோப் 43 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, ரோவ்மன் பாவெல் (Rovman Powell) ருத்ர தாண்டவம் ஆடினார்.
இலங்கையின் தசுன் ஷானகா (Dasun Shanaka) அதிரடியாக 10 பந்துகளில் 2 சிக்ஸர் விளாசி 21 ஓட்டங்கள் எடுத்தார்.
Thwack & Boom! 6️⃣💥6️⃣
— International League T20 (@ILT20Official) February 9, 2025
Dasun Shanaka & Rovman Powell capitalise big time, smashing two monster hits over the fence! 🥵
Dubai Capitals are moving along well and this over puts this Final on an even keel.#Final #DPWorldILT20 #TheFinalPush #AllInForCricket @DPWorldUAE @DP_World… pic.twitter.com/aFUYUjUWAM
ரோவ்மன் பாவெல் மிரட்டல்
சிக்கந்தர் ரஸாவும் அதிரடி காட்ட, பாவெல் அரைசதம் அடித்தார். அவர் 38 பந்துகளில் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
எனினும் ரஸாவின் மிரட்டலான ஆட்டத்தில் துபாய் கேபிட்டல்ஸ் 19.2 ஓவரில் 191 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. அவர் 12 பந்துகளில் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
துபாய் கேபிட்டல்ஸ் முதல் முறையாக கிண்ணத்தை வென்றது. ரோவ்மன் பாவெல் ஆட்டநாயகன் விருதையும், சாம் கர்ரன் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |